
செய்திகள் உலகம்
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
பெய்ஜிங்:
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது.
திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார்.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என தெரிவித்திருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am