நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் புரிந்துவரும் மனிதக் கொலைகளுக்கு தீர்வு பிறக்குமா? காசா போர் நிறுத்த புதிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்

வாஷிங்டன்:

இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தத்தின்பேரில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. 

மேலும் காசாவில் அத்துமீறி தாக்கி வரும் இஸ்ரேலுக்கு நிரந்தர முடிவு கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்த கால கட்டத்தில் நடைபெறும் என்று தெரிகிறது.

முன்னதாக மார்ச் மாதம் குறுகிய கால போர் நிறுத்தம் முறிந்தது. அதன் பின்னர் இரண்டு மாத போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் மே மாதத்தில் இதேபோன்ற ஒரு போர் நிறுத்த திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஹமாஸ், இதனை போரை குறுகிய நாட்களுக்கு இடைநிறுத்தி பின்னர் போரைத் தொடர உதவும் வழிமுறையாகவே பார்த்தது. மேலும் ஒரு நிரந்தர சமாதான ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் உடன்படாததாக கருதியது. 

காசாவில் இஸ்ரேல் இராணுவம் புரிந்துவரும் பேரழிவானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஹமாஸ் உடனான 60 நாள் போர் நிறுத்தத்துக்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் இந்த முறை 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஏதேனும் வித்தியாசம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த 60 நாள் போர் நிறுத்த காலத்தில், பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக ஹமாஸ் உயிருடன் உள்ள 10 பணய கைதிகள், இறந்த 18 பணய கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. 

60 நாட்களில் நீண்ட கால ஒப்பந்தம் எட்டப்பட்டால் மீதமுள்ள 22 பிணை கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். மேலும் காசாவில் இஸ்ரேலின் அக்கிரமத்திற்கு நிரந்தர முடிவு கட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இந்த கால கட்டத்தில் நடைபெறும். 

ஹமாசை பொறுத்தவரை இஸ்ரேலிய படைகள் காசாவில் இருந்து முழுமையாக திரும்ப பெறப்படவேண்டும். அவர்கள் எங்கள் தாய் மண்ணை விட்டு முற்றிலும் நீங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset