
செய்திகள் உலகம்
ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் இந்தோனேசியாவிற்கும் நீட்டிக்கப்படலாம்: துணைப் பிரதமர் கான் கிம் யோங்
சிங்கப்பூர்:
ஜொகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார வட்டாரம் இந்தோனேசியாவிற்கும் நீட்டிக்கப்படலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong)
கூறியுள்ளார்.
ஆசியான் நாடுகளுக்கு இடையிலான கூட்டணியை முத்தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தும் என்று அவர் சொன்னார்.
அமெரிக்காவின் வர்த்தக வரி நீடித்து நிலைத்திருக்கும் சாத்தியம் இருப்பதாய் அவர் சொன்னார்.
வர்த்தகங்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட வேண்டும் என்று கான் வலியுறுத்தினார்.
விநியோகச் செயல்பாடுகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கும்படியும் பல சந்தைகளில் கால்பதிப்பது குறித்து ஆராயும்படியும் அவர் வர்த்தகர்களை கேட்டுக்கொண்டார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான முயற்சிகளுக்கு அப்பால் வர்த்தகங்களும் அவற்றின் பங்கைச் செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் துணைப் பிரதமருமான கான் வலியுறுத்தினார்.
கான் இந்தோனேசியாவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரைச் சந்தித்தார். இரு நாட்டுத் தொடர்பை வலுப்படுத்துவது நோக்கம் என்றார் அவர்.
ஆசியான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பதாய் மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் துணையமைச்சர் லியூ சின் தொங் (Liew Chin Tong) குறிப்பிட்டார்.
எனினும் சூழ்நிலைகள் மாற, நாடுகளும் மாற்றத்தைத் தழுவ வேண்டும் என்று அவர் சொன்னார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm