செய்திகள் மலேசியா
கிள்ளானில் பரபரப்பு: போலிஸ் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற ஆடவர் கைது
ஷா ஆலம்:
கிள்ளான், பண்டமாரான் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸ் வாகனத்தை மோதிவிட்டு தப்ப முயன்ற 31 வயது நபர் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு ஜாலான் பந்திங் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு கார் செல்வதைக் கண்ட போலிசார், அதை நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், அந்த நபர் போலிசாருக்கு ஒத்துழைக்காமல் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, போலிசார் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அந்த காரைப் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
அந்த நபர் தப்பிக்கும் முயற்சியில் போலிஸ் வாகனத்தின் இடது பக்கத்தில் மோதியதுடன், சாலையில் சென்ற மற்ற இரண்டு பொதுமக்களின் வாகனங்கள் மீதும் மோதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து 'மெத்தாம்பேட்டமின்' வகை போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணையில், அந்த நபருக்கு ஏற்கனவே ஐந்து குற்றப் பின்னணிகளும், நான்கு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார்.
தற்போது அந்த நபர் மீது அரசுப் பணியைத் தடுத்தல், ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுதல், போதைப்பொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 16-ஆம் தேதி வரை அவரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:33 pm
‘KTMB’ தண்டவாளத்தில் மின்சாரக் கேபிள்களைத் திருடிய 3 வெளிநாட்டினர் கைது
March 13, 2026, 5:32 pm
மலேசியாவில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: கோலாலம்பூரில் திரண்ட தன்னார்வலர்கள்
March 13, 2026, 5:28 pm
வீட்டருகில் நிலம் உள்ள அரசு ஊழியர்கள் காய்கறி பயிரிட வேண்டும்: விவசாய அமைச்சர் சாபு பரிந்துரை
March 13, 2026, 5:26 pm
“அரையாண்டு வரை மலேசியாவில் உணவு தட்டுப்பாடில்லை”: டத்தோ ஸ்ரீ முஹம்மத் சாபு
March 13, 2026, 5:25 pm
காலைத் தொழுகைக்கு வரும் குழந்தைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் அல்-குட்ஸ் பெராமு பள்ளிவாசல்
March 13, 2026, 2:06 pm
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கொன்ற ஆடவர்
March 13, 2026, 2:05 pm
