நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: கோலாலம்பூரில் திரண்ட தன்னார்வலர்கள்

கோலாலம்பூர்: 

2026-ஆம் ஆண்டுக்கான உலக அல்-குட்ஸ் தினத்தை முன்னிட்டு, கோலாலம்பூரில் உள்ள தாபுங் ஹாஜி கட்டிடத்தின் அருகில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். 

பாலஸ்தீன மக்களின் போராட்டத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

மதிய நேரத்திலேயே குவியத் தொடங்கிய பொதுமக்கள், பாலஸ்தீனக் கொடிகளையும், போராட்ட ஆதரவுப் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். கருப்பு நிற ஆடை அணிந்திருந்த பலர், காசா, அல்-அக்ஸா பள்ளிவாசலைப் பாதுகாக்கும் முழக்கங்களை எழுப்பினர். தன்னார்வ நிறுவனங்கள், மாணவர்கள், அரசியல் அமைப்புகள் இணைந்து இந்த மனிதாபிமானப் பேரணியை ஒருங்கிணைத்தன.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தொடங்கிய இந்தப் பேரணி, அமைதியான முறையில் பயணித்தது. அங்கு பாலஸ்தீனப் பிரச்சினை தொடர்பான கோரிக்கை மனுவைச் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்தப் பேரணி எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset