
செய்திகள் மலேசியா
சுங்கை பூலோ மருத்துவமனையில் 300 நோயாளிகளுக்கு 4 மருத்துவர்களா?: சுகாதார அமைச்சு விளக்கம்
சுங்கை பூலோ:
300 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மூன்று மருத்துவ அதிகாரிகளும் ஒரு மருத்துவ நிபுணர் மட்டுமே இருப்பதாக சுங்கை பூலோ மருத்துவமனையின் அறிவிப்பைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்த பொது மக்களுக்குச் சுகாதார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
சுங்கை பூலோ மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பையும் மருத்துவர்களின் பற்றாக்குறையையும் சுகாதார அமைச்சு கருத்தில் கொள்வதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி சுங்கை பூலோ மருத்துவமனையின் எலும்பியல் சிகிச்சை பிரிவில் 300 நோயாளிகளைக் கவனிக்க 4 நான்கு மருத்துவர்கள் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
அந்த எண்ணிக்கை நோயாளிகளுடன் வந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அடங்கும், என்று சுகாதார அமைச்சகம் கூறியது.
அன்றைய தினம் 158 நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சிகிச்சையாக நீண்ட நேரம் காத்திருக்கும் நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைப் புரிந்து கொள்ள இயல்வதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இந்தச் சிக்கலை தீர்க்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சு தனது பதிவில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, 300 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மூன்று மருத்துவ அதிகாரிகளும் ஒரு மருத்துவ நிபுணர் மட்டுமே இருப்பதாக சுங்கை பூலோ மருத்துவமனையின் அறிவிப்பை ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு அதில் பிரதமர் அன்வார், சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்லி மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 3:28 pm
சுபாங் ஆலம் எல்ஆர்டி நிலையம்: தண்டவாளத்தில் விழுந்த ஆடவருக்குத் தலையில் பலத்த காயம்
July 4, 2025, 1:41 pm
சரியான முடிவு எடுப்பது என்பது மிகவும் கடினமானது: நிக் நஸ்மி
July 4, 2025, 1:41 pm
சிரியா ஐ.எஸ்.க்கு நிதி திரட்டிய வங்காளதேச போராளி கும்பல் மலேசியாவில் கைது: ஐஜிபி
July 4, 2025, 10:31 am
செர்டாங்கில் நாய் கடித்ததால் 3 வயது சிறுவன் காயமடைந்தான்: போலிஸ்
July 4, 2025, 10:30 am
மேக்ஸ் 2 நெடுஞ்சாலை ஊழல் வழக்கில் 61 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்: டான்ஶ்ரீ அஸாம் பாக்கி
July 4, 2025, 10:29 am
மலேசியர்களுக்கான விசா விலக்கை கனடா மறுபரிசீலனை செய்யும்: பிரதமர் நம்பிக்கை
July 4, 2025, 10:28 am