நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்சார கட்டணம் உயர்வால் உயர் கல்வி மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்: டிஎன்பி

கோலாலம்பூர்:

மின்சார கட்டணம் உயர்வால் உயர் கல்வி மாணவர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

டிஎம்பி எனப்படும் தேசிய மின்சார வாரியம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

புதிய மின்சாரக் கட்டண மதிப்பாய்வு முறைகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதில் 23 மில்லியனுக்கும் அதிகமான வீட்டு பயனீட்டாளர்களாக உள்ள பெரும்பாலான உயர் கல்வி  மாணவர்கள் எந்தவொரு கட்டண உயர்வாலும் பாதிக்கப்பட மாட்டார்கள்.

சாதாரண வீடுகளில் வாடகைக்கு எடுக்கும் அல்லது குடியிருப்பு கல்லூரிகளில் வசிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கான மின்சார கட்டணம் அவர்களின் பயன்பாட்டு முறைகளைப் பொறுத்து எந்த அதிகரிப்பையும் சந்திக்காது.

கூடுதலாக, பயன்பாட்டு நேர திட்டத்தை செயல்படுத்துவது, மாணவர்கள் உள்ளிட்ட  பயனீட்டாளர் பயன்பாட்டை ஆஃப்-பீக் நேரங்களுக்கு மாற்றுவதன் மூலம் மின்சாரக் கட்டணத்தைச் சேமிக்க அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டாக, சலவை இயந்திரங்கள், ஏர் கண்டிஷனர்கள் அல்லது கணினிகள் போன்ற கனரக மின் சாதனங்களைப் பயன்படுத்துவதை ஆஃப்-பீக் நேரங்களில் திட்டமிடலாம்.

இதனால் குறைந்த கட்டண விகிதங்களை அனுபவிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset