நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

RTS இணைப்பு பணிகள்: ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலை ஜூலை 16 வரை மூடப்படும்

ஜொகூர் பாரு:

சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாருவுக்கும் இடையிலான RTS ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளால்  Stulang நோக்கிச் செல்லும் ஜாலான் இஸ்மாயில் சுல்தான் ஜூலை 16-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் முழுமையாக மூடப்படும் என்று  RTS Operations Pte Ltd (RTSO) நிறுவனம் கூறியது.

ஜூலை 16-ஆம் தேதி வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஜாலான் இஸ்மாயில் சுல்தான் சாலை மூடப்படும் என்று RTS Operations Pte Ltd (RTSO) தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது. 

கட்டுமானப் பணிகள் ஒவ்வொரு இரவும் ஏழு மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பொது மக்கள் மாற்று வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். 

பொது மக்கள் RTS Operations Pte Ltd (RTSO) முகநூல் பக்கத்தில் மாற்றுவழிகள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset