நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இத்தாலிக்கான அதிகாரப்பூர்வ பயணம் 8.13 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை ஈட்டியுள்ளது: பிரதமர்

ரோம்:

இத்தாலிக்கான அதிகாரப்பூர்வ பயணம் 8.13 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை ஈட்டியுள்ளது.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியா - இத்தாலி பொருளாதார ஒத்துழைப்பு வட்டமேசை கூட்டம், இங்குள்ள நிறுவனங்களுடனான இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்பட்டன.

இதன்  மூலம் மலேசியா 8.13 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு திறனை வெற்றிகரமாக அடைந்துள்ளது.

இந்த வட்டமேசை கூட்டத்தில் 23 உற்பத்தித் துறை நிறுவனங்கள், ஒன்பது சேவைத் துறை நிறுவனங்கள், இரண்டு வர்த்தகத் துறை நிறுவனங்கள், ஐந்து அரசு நிறுவனங்கள், இரண்டு தொழில்துறை நிறுவனங்கள் அடங்கிய 41 இத்தாலிய நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த இரண்டு சந்திப்புகள் மூலம் அடையப்பட்ட முதலீட்டு திறன் 8.13 பில்லியன் ரிங்கிட்டாக பதிவானது.

ரோம் பயணத்தின் முடிவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset