நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போர்னியோ டிவி அறிமுகம்: சபா மாநிலத்தின் கதைகளை அனைத்துலக அளவில் எடுத்துரைக்கும் 

கோத்தா கினாபாலு: 

சபா மாநிலத்தையும் மாநில மக்களின் கதைகளையும் அனைத்துலக அளவில் கொண்டு சேர்க்கும் விதிமாக சபா மாநிலம் அதன் சொந்த மாநில தொலைக்காட்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 

சபா மாநில மக்களின் கதைகளைக் கொண்டு சேர்க்கும் விதமாக BORNEO TV தொலைக்காட்சி அறிமுகம் கண்டது. 

சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் போர்னியோ டிவியைத் தொடங்கி வைத்து  அறிமுகம் செய்தார். 

சபா மாநிலத்தின் நீண்டகால தூர நோக்கு இலக்கை அடையவும் இந்த தொலைக்காட்சி அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு சபா மாநில அரசாங்கம் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதாக சபா மாநில முதலமைச்சர் டத்தோஶ்ரீ ஹஜிஜி நோர் குறிப்பிட்டார். 

தனியார் துறையுடன் இணைந்து மாநில அரசாங்கம் இந்த தொலைக்காட்சியை நடத்துகிறது. எந்தவொரு அரசாங்க நிதிகளும் இதில் பயன்படவில்லை. 

சரவாக் மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது சபா மாநிலமும் சொந்த மாநில தொலைக்காட்சி ஒன்றை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset