நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்ஹந்தியான் படகு விபத்து: விசாரணை முடியும் வரை ஓட்டுநரின் உரிமம் இடைநிறுத்தம்

கோலா திரெங்கானு: 

சனிக்கிழமை பெர்ஹெந்தியான் தீவில் மூன்று உயிர்களை பறித்த சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்திற்கான விசாரணை முடிவுகள் வரும் வரை படகு ஓட்டுநரின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மண்டல  கடல்சார் துறை துணை இயக்குநர் Mohamad Halizam Samsuri தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான காவல்துறை விசாரணையின் முடிவு வரும் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அதோடு படகு சேதமடைந்துள்ளதால் அதற்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய, 1952 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 334 இன் கீழ் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

விதிமுறைகளை மீறி படகு ஓட்டியது கண்டறியப்பட்டால்  கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திரெங்கானு பெர்ஹெந்தியான் தீவில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset