நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போலி வாகன இருக்கை பட்டை கருவிகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை 

கோலாலம்பூர்:

வாகனத்தை செலுத்தும் போது, இருக்கை பட்டை ஒலி எழுப்பாமல் இருப்பதற்கு அதை முடக்கி வைக்க பயன்படுத்தப்படும் கருவியை இறக்குமதி செய்வதை தடைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 

இந்த நடைமுறை 2025 டிசம்பர் 31 முதல் அமலுக்கு வருவதாக அரசு பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளது. 

வாகன ஓட்டுநர்கள் இருக்கை பட்டை அணியாமல் பயணிக்கு போது அதற்கான அலாரங்களை முடக்க போலி வாகன இருக்கை பட்டை கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். 

வாகன ஓட்டிகள் இருக்கை பட்டை அணியாமல் இவ்வாறு கருவிகளை பயன்படுத்துவது ஆபத்தானது

இருக்கை பட்டை அணிவதற்குப் பதிலாக இந்தக் கருவிகளைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது

முன்னதாக, சந்தையில் போலி வாகன இருக்கை பட்டை கருவிகளை விற்பனை செய்வதைத் தடை செய்வது குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சகத்துடன் போக்குவரத்து அமைச்சக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அதன் அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset