நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம் 

பெய்ஜிங்: 

சீனா நாட்டின் மத்திய பகுதியாக பார்க்கப்படும் ஹெனான் பிராந்தியத்தில் கனத்த மழை பொழிந்த நிலையில் அதில் இருவர் பலியான வேளையில் அறுவர் மாயமாகியுள்ளனர். 

கோடை வெப்பம் காரணமாக சீனாவில் கடுமையான வானிலை ஏற்பட்டுள்ளது. 

வழக்கத்திற்கு மாறான மழை பொழிந்தது. இதனால் ஹெனான் பிராந்தியத்தின் தைப்பிங், எர்லாங்பிங் ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன 

ஒட்டுமொத்தமாக 225.3 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்ட நிலையில் ஷெவெய் நதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

கனமழை காரணமாக சுற்றுவட்டார குடியிருப்புகள் பெரும் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு இலக்காகினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset