நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி

வாஷிங்டன்:

வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று உலகப் பணக்காரரான எலான் மஸ்க் கூறியுள்ளார்.

வரி மற்றும் செலவு மசோதா, வரலாற்றில் மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

அமெரிக்க செனட் சபையில் இந்த மசோதாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும் என்றும்  எலான் மஸ்க் சாடியுள்ளார். 

வரி மற்றும்  செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் புதிய கட்சி உருவாகும்.

மக்களுக்கு உண்மையில் ஒரு குரல் இருக்க வேண்டும் என்பதற்காக நமது நாட்டிற்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை.

அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க வேண்டிய நேரம் இதுவே என்று அவர் குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset