நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்

பேங்காக்:

தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இன்று தற்காலிகமாகப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறது.

அவர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று தாய்லாந்து செனட்டர்கள் முன்வைத்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் வரை அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகியிருப்பார்.

ஜூன் 15-ஆம் தேதி கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடனான தொலைபேசி உரையாடல் கசிவானதிலிருந்து பேதொங்தார்ன் பலத்த எதிர்ப்பை எதிர்நோக்குகிறார்.

அவர் அந்த உரையாடலில் தமது ராணுவத் தளபதியைக் குறை கூறியிருந்தார்.

அதற்கு பேதொங்தார்ன் பின்னர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset