நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள் 

ஜகார்த்தா: 

JAKARTA- CIKAMPEK டோல் சாவடி அருகே ஒரு மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

லாரியிலிருந்த மீன்கள் யாவும் சாலையில் சிதறியது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் அடங்கிய காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. 

கடந்த சனிக்கிழமை காலை 9.20 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மினி லாரியின் பின்னால் சக்கரம் வெடித்ததால் அந்த லாரி விபத்துக்குள்ளானது. இதனால் நீண்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று CIKAMPEK போக்குவரத்து, நெடுஞ்சாலை போலீஸ் தலைவர் SANDY TITAH NUGRAHA குறிப்பிட்டார். 

சிறிய காயங்களுக்கு இலக்கான மினி லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset