
செய்திகள் உலகம்
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
பாரிஸ்:
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம் அமெரிக்காவின் நடவடிக்கையால் 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும் என்று லேன்செட் ஜார்னல் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் செயல்பட்டு வரும் பல உதவி அமைப்புகள் போதிய நிதி இல்லாமல் தவித்து வருகின்றன.
போர், பஞ்சம், வறுமை உள்ளிட்டவற்றால் வாடும் மக்களுக்கு இந்த உதவி அமைப்புகள் உணவு, நீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைக் கொடுத்து உதவின.
தற்போது அந்த நிலைமை முற்றிலும் மாறியது.
டிரம்ப் நிர்வாகத்தின் நிதி நிறுத்தத்தால் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரழக நேரிடும்.
இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் குழந்தையாக இருக்கும் என்றும் லேன்செட் ஜார்னல் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எளிதில் பாதிப்படையக்கூடிய மக்களுக்கு உதவ வடிவமைத்த உதவி கட்டமைப்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சரியத்தொடங்கியுள்ளது.
இதை உருவாக்க இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தேவைப்பட்டது, ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm