நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசாவில் 60 நாட்களுக்குப் போர்நிறுத்தம்: ஹமாஸ் இயக்கம் இணங்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல் 

வாஷிங்டன்: 

காசாவில் 60 நாடுகளுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கான இறுதி பரிந்துரை முன்மொழியப்பட்டுள்ளது. 

இதற்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் இயக்கம் ஆதரவும் இணக்கமும் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார். 

அமெரிக்காவின் பிரதிநிதிகள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் நீண்ட சந்திப்பில் ஈடுபட்டு கொண்டு காசா விவகாரத்தைப் பற்றி விவாதித்ததாக டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்தார். 

காசாவில் 60 நாட்களுக்கான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. காசாவில் போரை நிறுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். 

ஆக, இதுவே இறுதி பரிந்துரையாகும் என்று டிரம்ப் ஆணித்தரமாக சொன்னார். முன்மொழியப்பட்ட 60 நாட்கள் போர்நிறுத்தம் ஹமாஸ் இயக்கத்திடம் தகவல் கொண்டு சேர்க்கப்படும் என்று டிரம்ப் சொன்னார். 

ஹமாஸ் இயக்கம் இந்த விவகாரத்திற்கு இணக்கம் அளித்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவும் என்று தாம் எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset