
செய்திகள் மலேசியா
வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என நினைத்தேன்: அண்டை வீட்டுக்காரர்
சிரம்பான்:
வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டவர்கள் வெளியூர் சென்றிருக்கிறார்கள் என நினைத்தேன்.
அடையாளம் கூற விரும்பாத அண்டை வீட்டுக்கார பெண் இதனை கூறினார்.
சிரம்பான் தாமான் புக்கிட் கிறிஸ்டலில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனைத் தொடந்து நேற்று மாலை 5 மணியளவில் அவ்வீட்டில் நடத்திய சோதனையில் மூவரின் அழுகிய சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சம்பந்தப்பட்ட அக்குடும்பம் அந்தப் பகுதிக்கு வெளியே இருப்பதாக நினைத்தோம். கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குடும்ப உறுப்பினரைப் பார்த்ததாகவும் அவர் கூறினார்.
அந்த வீட்டில் கணவன் மனைவியுடன் 30 வயதுடைய ஆட்டிசம் உள்ள ஒரு மகனும் வசிக்கிறார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் என் வீட்டிற்கு வந்து நாய்க்கு உணவளித்தார். அப்போது தான் நான் அந்தக் குடும்பத்தைப் பார்த்தேன். அவர்கள் வெளியூர்களில் இருந்திருக்கலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அவர்கள் இறந்து கிடந்தது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:53 pm
ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற வாக்காளர்களுக்கே முன்னுரிமை; தனிநபர்களுக்கு அல்ல: அப்பாஸ்
July 2, 2025, 10:51 pm
பள்ளிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய 2 சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்
July 2, 2025, 4:53 pm
பேருந்தைச் செலுத்தியவாறு கேம் விளையாடிய ஓட்டுநரின் காணொலி வைரல்
July 2, 2025, 4:48 pm
பிரிக்பீல்ட்ஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்: போலிஸ்
July 2, 2025, 4:47 pm
செராஸ், பிரிக்பீல்ட்ஸில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பில்லாதவை: போலிஸ்
July 2, 2025, 4:46 pm