நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

படகு விபத்தில் மரணமடைந்த வெண்பனி ஒரே பிள்ளை; அவள் பிறப்புக்காக நீண்ட காலமாக காத்திருந்தோம்: பாட்டி 

சுங்கைப்பட்டாணி:

வெண்பனி பிறப்புக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் என் பேத்தி போய்விட்டாள்.

வெண்பனியின் பாட்டி 68 வயதான டி. பஞ்சவர்ணம் உருக்கத்துடன் இதனை கூறினார்.

திரெங்கானுவின் பெசுட்டில் உள்ள பூலாவ் பெர்ஹெந்தியானில் படகு கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் மரணமடைந்தனர்.

மரணமடைந்தவர்களில் 10 வயதான வெண்பனி என்ற மாணவியும்  அடங்குமார்.

வெண்பனி தந்தை விஜயராஜ், சுங்கைப்பட்டாணியில் உள்ள பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரின் தாயார் நளினி பத்துகவானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார்.

பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்று வந்த வெண்பனி அவர்களுக்கு ஒரே பிள்ளையாவார்.

வெண்பனி ஒரு நல்ல பேத்தி. அவளை நாங்கள் இழந்து விட்டோம்.  மேலும் அவர் ஒரே பிள்ளை என்பதால் அவர் அனைவராலும் நேசிக்கப்பட்டவராகவும் இருந்தார்.

சமீபத்திய விடுமுறை நாட்களுடன் சேர்த்து தனது பெற்றோருடன் பூலாவ் பெர்ஹெந்தியானுக்கு விடுமுறையில் செல்ல எனது பேத்தி மிகவும் உற்சாகமாக இருந்தார்.

அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டு  மறுநாள் திரும்பி வரவிருந்தனர்.

ஆனால் மகிழ்ச்சியான பயணம் சோகத்தில் முடிந்து விட்டது என்ற பஞ்சவர்ணம் வேதனையுடன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset