நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்; காலிறுதியில் பிஎஸ்ஜி, இந்தர்மியாமி தோல்வி

ஜியோர்ஜியா:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றிக்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறினர்.

மெர்சடிஸ் பென்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் இந்தர்மியாமி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் பிஎஸ்ஜி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தர்மியாமி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக ஜோவ் நேவாஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை அக்ராவ் ஹகிமி, எதிரணி வீரர் ஒருவர் தவறுதலாக அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர்மியாமி அணியினர் இறுதி வரை போராடி தோல்வி கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset