நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்: காலிறுதியில் செல்சி

நியூயார்க்:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு செல்சி அணியினர் முன்னேறினர்.

பேங்க் ஆப் அமெரிக்கா அரங்கில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் செல்சி அணியினர் பென்பிகா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோல்களை ரீஸ் ஜேம்ஸ், கிறிஸ்டோபர் நுங்கு, பெட்ரோ நெட்டோ, கீர்னன் டியூஸ்பரி-ஹால் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலக கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பால்மிராஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் போதாபோகோ அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset