நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமேசான் நிறுவனர் பெசோஸ் - சான்செஷ் ஆடம்பர திருமணம்: காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு 

வெனிஸ்:

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் லாரென் சான்செஷின் ஆடம்பரத் திருமணம் வெள்ளிக்கிழமையன்று வெனிஸில் நடந்தது.

இந்த திருமணத்தில் கலந்துகொள்ள திரைப் பிரபலங்கள், நடிகர்கள், அரசு விருந்துனர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் வெனிஸிற்குப் பயணப்பட்டுள்ளனர்.

ஓப்ரா வின்ஃப்ரே, ஒர்லாண்டோ ப்ளூம், கைலி ஜென்னர் மற்றும் இவான்கோ டிரம்ப் ஆகியோர் வியாழன் அன்றும்  வெள்ளியன்றும் வெனிஸின் தெருக்களிலும் படகுகளிலும் காணப்பட்ட பிரபலங்களில் ஒரு சிலர் ஆவர்.

இந்த நிகழ்வுக்கு எதிராக, சுற்றுலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள் தொடங்கி காலநிலை மாற்ற செயற்பாட்டாளர்கள் வரை பல தரப்பிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு, 55 வயதான் சான்செஷ் ஆடம்பரமான நகைகள் மற்றும் ஆடைகளை அணிந்து 61 வயதான பெசோஸுக்கு அருகில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset