
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசிய திட்டத்தின் மதிப்பாய்வு அவசரமாக மேற்கொள்ளப்படவில்லை: ரபிசியின் கூற்றை ஃபஹ்மி மறுத்தார்
கோலாலம்பூர்:
13ஆவது மலேசிய திட்டத்தின் மதிப்பாய்வை அரசாங்கம் அவசரமாக மேற்கொள்ளவில்லை.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை கூறினார்.
13ஆவது மலேசியா திட்டத்தை திருத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக இது அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது என அவர் சாடியுள்ளார்.
ஆனால் உண்மையில் இத்திட்டத்தின் திருத்தம் செய்வதற்கான முடிவு அவசர நடவடிக்கை அல்ல.
மாறாக கடந்த சில வாரங்களாக அமைச்சரவைக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.
எந்தவொரு கொள்கை, திட்டம் அல்லது முடிவும் முதலில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும்.
மேலும் அவை அனைத்தும் எந்த அமைச்சும் விரும்புவதைப் போலவே இருக்காது.
அமைச்சரவையில் பல்வேறு கருத்துக்கள் வழங்கப்படும்.
மேலும் எந்தவொரு முடிவும் வெவ்வேறு அமைச்சகங்களின் கருத்துக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
அதேபோல் 13ஆவது மலேசிய திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக, பல விஷயங்கள் ஆராயப்பட வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm