
செய்திகள் மலேசியா
NANBA திட்டம் உறவுகளை வலுப்படுத்தும்; அரசாங்க தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
நான்பா திட்டம் National Aspirations with Youth (NANBA) Programme உறவுகளை வலுப்படுத்துவதுடன் அரசாங்க தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும்.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
நூருல் இஸா அன்வார் இப்ராஹிம் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதி மக்களுக்கு நிறைவான சேவைகளை வழங்கினார்.
இப்போது நான் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன்.
குறிப்பாக லெம்பா பந்தாய் மக்களுக்கு எப்போதும் நான் நண்பனாக இருப்பேன். தொகுதி மக்களுக்கு அரசாங்க சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்து வருகிறேன்.
தகவல் தொடர்பு அமைச்சின் நண்பா எனும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய சமூகம், அரசாங்கம் இடையே நல்லதொரு ஒத்துழைப்பையும் இணக்கத்தையும் உருவாக்கும் வகையில் இந்த நண்பா திட்டம் வடிவகைப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் இந்திய சமூகத்திற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் சிறந்த, பொருத்தமான திட்டமாக அமைகிறது.
அரசாங்கத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் முயற்சிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளும் ஒரு தளமாக இது விளங்குகிறது என்றார்.
லெம்பா பந்தாய் மண்டபத்தில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் சிறப்பு அங்கமாக புதையல் வேட்டை, அரசு, தனியார் சார்ந்த நிறுவன முகப்பு சேவை கண்காட்சி, வண்ணம் தீட்டும் போட்டி, McDonald’s உடன் சிறுவர் மனமகிழ் நிகழ்வு, ரஹ்மா மடானி விற்பனை, அதிர்ஷ்ட குலுக்கல் இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சரின் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 11:58 am
பெர்மிம் பேரவை கூட்டத்தில் நடந்தது என்ன?: கெபிமா முதல் நிலை துணைத் தலைவர் டத்தோ உஸ்மான் விளக்கம்
June 28, 2025, 10:53 am