நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமயம், ஆலயப் பிரச்சினைகளை கையாள இந்து புளூபிரிண்ட் தயார் செய்யும் பணிகள் மஹிமா துரிதமாக மேற்கொள்ளும்: டத்தோ சிவக்குமார்

பத்துமலை:

சமயம், ஆலயப் பிரச்சினைகளை மையாள இந்து புளூபிரிண்ட் தயார் செய்யும் பணிகள் மஹிமா துரிதமாக மேற்கொண்டு வருகிறது என்று மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.

இந்தியர் புளூபிரிண்ட் எனப்படும் திட்ட வரைவு குறித்து பேசப்படுகிறது. 

ஆனால் இந்துக்களுக்கு என புளூபிரிண்ட்டை தயார் செய்யும் பணிகளை மஹிமா தொடங்கியுள்ளது.

மஹிமாவின் துணைத் தலைவர் வழக்கறிஞர் டத்தோ செல்வம் மூக்கையா வாயிலாக இத் திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்படும்.

காரணம் நாட்டில்  இந்து சமயம், ஆலயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

இப் பிரச்சினைகளுக்கு எல்லாம் முழுமையாக தீர்வு காண்பதற்கு இந்த புளூபிரிண்ட் மிகவும் அவசியமாகும்.

அதே வேளையில் மஹிமாவின் கீழ் சட்ட பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கஞர் ஸ்ரீதரன் தலைமையேற்பார் என்று டத்தோ சிவக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset