செய்திகள் உலகம்
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
துபாய்:
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 13-ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. ஏன் நாம் ஈரானை தொட்டோம் என்ற அளவில் பலத்த அடியை இஸ்ரேல் அடிவாங்கியது. பதறிப் போனது அமேரிக்கா.
ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தீவிரம் அடைந்த நிலையில் கடந்த 22-ம் தேதி அமெரிக்காவின் பி-2 குண்டு வீச்சு விமானங்கள் , ஈரான் அணு ஆயுத தளங்கள் மீது சக்திவாய்ந்த குண்டுகளை போட்டன.
அதன்பின் முதல் முறையாக ஈரான் ஆன்மிகத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியின் வீடியோ உரை ஈரான் டி.வி.யில் நேற்று ஒளிபரப்பப்பட்டது.
வீடியோ உரையில் அயத்துல்லா அலி கொமேனி கூறியதாவது:
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போரில் தலையிடவில்லை என்றால், இஸ்ரேல் முற்றிலும் அழிந்துவிடும் என அமெரிக்கா நினைத்தது. அதனால்தான், இதில் அமெரிக்கா தலையிட்டது. ஆனால், இந்த போரில் அமெரிக்கா சாதித்தது ஒன்றும் இல்லை. வெற்றி பெற்றது ஈரானின் இஸ்லாமிக் குடியரசுதான். அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம். அது அவர்களால் மறக்க முடியாது.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதுபோன்ற தாக்குதல் எதிர்காலத்திலும் தொடரலாம்.
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை, தேவைப்படும்போது ஈரானால் தாக்க முடியும். இனிமேல் யாராவது அத்துமீறினால், எதிரி நாடு அதிக விலை கொடுக்க நேரிடும்.
இவ்வாறு அயதுல்லா அலி கொமேனி கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
20வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை வென்ற பிரிட்டிஷ் சாகச வீரர்
May 22, 2026, 11:04 pm
