நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏமனில் மின்சார ஆலைகள் மீது இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்: 4 பேர் மாண்டனர்

சானா:

ஏமனில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் மாண்டனர்.

ஏமனின் சனா (Sanaa) நகரைத் தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் ஒப்புக்கொண்டது.

அதிபர் மாளிகையின் வளாகத்தில் உள்ள ஒரு ராணுவத் தளம் மீதும் 2 மின்சார ஆலைகள், எரிபொருள் கிடங்கு ஆகியவை மீதும் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.

சண்டையிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று கூறிய ஹௌதி, பதில் தாக்குதல் நடத்தப் போவதாகச் சூளுரைத்தனர்.

2023இல் இஸ்ரேல்-ஹாமாஸ் போர் தொடங்கியதிலிருந்து ஹௌதி போராளிகள் இஸ்ரேலை அவ்வப்போது தாக்கியுள்ளனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகத் தாக்குதல் நடத்துவதாக அவர்கள் கூறியுள்ளனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset