செய்திகள் உலகம்
கம்போடியாவுடன் இருதரப்புப் பேச்சைத் தொடர வழிகள் உள்ளன: மாரிஸ் சங்கியாம்பொங்சா
பேங்காக்:
தாய்லந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சங்கியாம்பொங்சா கம்போடியாவுடன் இருதரப்புப் பேச்சை மீண்டும் தொடரமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு பல வழிகள் உள்ளன என்றும் இதில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு தேவையற்றது என்றும் அவர் கூறினார.
தாய்லந்து - கம்போடிய எல்லை பிரச்சனை கடுமையாகியிருக்கும் நிலையில் இரு தரப்பும் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தாய்லந்துப் பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென்னுடன் நடத்திய தொலைப்பேசி உரையாடல் கசிந்ததால் நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது.
இதற்கிடையே, தாய்லந்தின் பூமிஜைதாய் கட்சி, பிரதமர் பேதொங்தார்ன் ஷினவாத்ராவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரத் திட்டமிடுவதாகத் தெரிவித்தது.
ஆளும் கூட்டணியை விட்டுச் சென்ற வாரம் அந்தக் கட்சி விலகியது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 15, 2026, 2:25 pm
ஸ்வீடனின் புயலைக் கிளப்பும் புதிய சட்டம்: `சொந்தத்தில் திருமணங்களுக்குத் தடை!'
June 15, 2026, 10:59 am
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து: 12 பேர் மரணம்
June 14, 2026, 12:07 pm
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் சிற்பி டாக்டர் முஹம்மது உமர் சாப்ரா 93 வயதில் காலமானார்
June 13, 2026, 4:04 pm
