நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் -ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

மத்திய கிழக்கில் இஸ்ரேல் -ஈரான் இடையே ஏற்பட்டுள்ள சண்டை 12ஆவது நாளை எட்டியுள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவும் இந்த சண்டையில் இறங்கியதைத் தொடர்ந்து நிலைமை மோசமானது. 

மலேசிய நேரப்படி இன்று அதிகாலையில் கத்தாரில் உள்ள அமெரிக்கா இராணுவ பகுதிகளை ஈரான் தாக்கியது. 

தற்போது, இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். 

இந்த போர் நிறுத்தம் கட்டங்கட்டமாக கொண்டு வரும் அதேவேளையில் இரு நாடுகளுக்கும் கால அவகாசம் வழங்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்தார். 

இருப்பினும், ஈரான் இன்னும் இந்த போர் நிறுத்தம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்று சர்வதேச செய்தி ஊடகமான CNN குறிப்பிட்டுள்ளது. 

கத்தாரில் அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset