நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் அடிக்கல் நாட்டுடன் தொடங்கியது: டத்தோஶ்ரீ தனேந்திரன்

பிறை:

மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தின் ராஜகோபுரத்தின் கட்டுமானம் அடிக்கல் நாட்டுடன் தொடங்கியது.

ஆலயத்தின் கட்டட குழுத் தலைவரும் மலேசிய மக்கள் சக்தி கட்சியில் தலைவருமான டத்தோஶ்ரீ ஆர்எஸ் தனேந்திரன் இதனை கூறினார்.

ஸ்ரீ கங்காதர சிவ பெருமான் என்ற பெயருக்கு ஏற்ப இந்த ஆலயம் பிறை ஆற்றோரம் அமையவுள்ளது.

9 அடுக்கு ராஜகோபுரம், 5 அடுக்கு கோபுரங்கள் என இவ்வாலயம் கட்டப்படவுள்ளது. குறிப்பாக கருங்கல்லால் இவ்வாலயம் கட்டப்படவுள்ளது.

இப்படி இவ்வாலயம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமாக கட்டப்படவுள்ளது. கட்டப்படவிருக்கும் தலத்தில் ஏகதச ருத்ர ஜெப  ஹோமம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.

ஆலயம் கட்டும் தலத்தை சுத்தம் செய்வது இந்த ஹோமத்தின் முதன்மை நோக்கமாகும்.

அதே வேளையில் மக்கள் பசி, பட்டினி இல்லாமல் தீமைகளில் இருந்து விடுபட வேண்டும் என்பதும் இந்த ஹோமத்தின் நோக்கமாக இருந்தது.

இதில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மலேசியாவின் மிகப் பெரிய சிவன் ஆலயமான ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆலயத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்ற உத்வேகமும் எங்களுக்கு கிடைத்தது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

முன்னதாக மஹா சன்னிதானம் தருமபுர ஆதீனத்தால் அருளப்பட்டு, கூடியிருந்த அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்கினார். ராஜகோபுரத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்று ஆசி வழங்கினார்.

மேலும் மலேசியாவில் தொடர்ந்து ஆலயங்களை கட்டி இறை சேவை வழங்கும் டத்தோஶ்ரீ தனேந்திரன்  ஸ்ரீ கங்காதரன் சிவ பெருமான் ஆசி வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset