
செய்திகள் மலேசியா
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தோற்றுநரும் கல்வியாளருமான டான்ஶ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா காலமானார்
கோலாலம்பூர்:
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் தோற்றுநரும் கல்வியாளருமான டான்ஶ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா இன்று காலமானார்.
அவரின் மறைவை ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் இணை இயக்குர் சுரேன் கந்தா உறுதிப்படுத்தினார்.
கடந்த 1962ஆம் ஆண்டு சுங்கைப்பட்டாணியில் ஆசிரியராக பணியை தொடங்கியவர் டான்ஶ்ரீ தம்பிராஜா.
படிப்படியாக உயர்ந்து விரிவுரையாளரான அவர் அதன் பின் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
கல்வி, ஆன்மிகம் வாயிலாக இந்திய சமுதாயத்தை உயர்த்த முடியும் என்ற தூரநோக்கு சிந்தனையில் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தை அவர் தோற்றுவித்தார்.
கல்வி விரதம், கல்வி யாத்திரை என கல்வியுடன் சமயத்தை இணைத்து மாணவர்கள் மத்தியில் உருமாற்றத்தை அவர் கொண்டு வந்தார்.
ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வாயிலாக கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்திடையே மிகப் பெரிய கல்வி புரட்சியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
குறிப்பாக 50,000த்திற்கும் மேற்பட்ட இந்திய பட்டதாரி மாணவர்களை உருவாக்கி அவர் மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் டான்ஶ்ரீ தம்பிராஜாவின் மறைவு சமுதாயத்திற்கு மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது.
டான்ஶ்ரீ தம்பிராஜாவை பிரிந்து துயரும் அவரது குடும்பத்தாருக்கும் ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை நம்பிக்கை தெரிவித்து கொள்கிறது.
- நம்பிக்கை செய்திப் பிரிவு
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 3:05 pm
சரவாக் தினத்தன்று ஒற்றுமையோடும் ஒத்துழைப்போடும் செயல்பட வேண்டும்: வான் ஜுனைடி வேண்டுகோள்
July 21, 2025, 2:55 pm
முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வழக்கு: வெளிநாட்டு மாணவர் மீது குற்றச்சாட்டு
July 21, 2025, 1:12 pm
ஜெய்ன் ராயன் வழக்கில் தற்காப்பு வாதம் புரிய தாயாருக்கு உத்தரவு: தந்தை விடுவிக்கப்பட்டார்
July 21, 2025, 12:16 pm
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் இல்லை: நயிம் மொக்தார்
July 21, 2025, 12:15 pm
அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகள் நாட்டை பலவீனப்படுத்துடன் அமைதியின்மையை உருவாக்கும்: குணராஜ்
July 21, 2025, 12:14 pm
2.8 மில்லியன் பேர் MyDigital ID-யில் பதிவு செய்துள்ளனர்: ஜலிஹா முஸ்தாஃபா
July 21, 2025, 11:01 am