செய்திகள் மலேசியா
பொன்தியானில் பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று
பொன்தியான்:
ஜொகூர் மாநிலத்தில் மேலும் ஒரு பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொன்தியான் மாவட்டத்தில் இந்த நோயாளர் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்தது.
முன்னதாக, கோத்தா திங்கி பகுதியில் ஏற்பட்ட காசநோய் தொற்றால் ஐந்து பள்ளிகளில் ஆறு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இச்சம்பவம் அதில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளது.
மாநில கல்வி, தகவல் தொடர்பு செயற்குழு உறுப்பினர் அஸ்னான் தமீன் கூறுகையில், நோயாளியின் தொடர்பில் இருந்த அனைவரையும் கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அபாயம் உள்ள பகுதிகளில் முழுமையான சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து பள்ளிகளும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் நினைவூட்டினார்.
கடந்த வாரம், சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மத், கோத்தா திங்கி பகுதியில் 33 நேர்மறை டிபி வழக்குகள் கண்டறியப்பட்டதாகவும், 804 நெருங்கிய தொடர்பாளர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் கூறினார். அந்தக் குழுமத்தில் ஒரு மரணம் பதிவானாலும், அது டிபி காரணமாக அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
பொந்தியான் பகுதியில் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 6:16 pm
சீன புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து வசதி: பிளஸ் 32 ஸ்மார்ட் லேன்களை இயக்கவுள்ளது
February 9, 2026, 5:42 pm
மூன்று வீடுகளில் புகுந்து தாக்கிய வேலை இல்லாத நபர் கைது
February 9, 2026, 5:39 pm
அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது
February 9, 2026, 5:12 pm
ஆவணமற்ற இந்து ஆலயங்கள் பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும்: டத்தோ லோகபாலா
February 9, 2026, 5:08 pm
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: யுனேஸ்வரன்
February 9, 2026, 4:17 pm
போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்
February 9, 2026, 3:34 pm
ஸ்பைடர்மேன் உடை அணிந்து குழந்தையை பிச்சை எடுக்க பயன்படுத்திய ஆடவர் கைது
February 9, 2026, 3:31 pm
