செய்திகள் மலேசியா
மலாக்காவில் சாலை போக்குவரத்து துறையின் அதிரடி சோதனை: வெளிநாட்டவர்களின் வாகனங்கள் பறிமுதல்
மலாக்கா:
பிப்ரவரி 1 முதல் கடந்த சில நாட்களுக்கு நடைபெற்ற OPS PEWA நடவடிக்கையில், மலாக்கா சாலை போக்குவரத்து துறை 11 வாகனங்களைப் பறிமுதல் செய்தது. வாகனங்களை ஓட்டியவர்கள் சட்டபூர்வமான ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர்களாவர்.
சோதனையில் மூன்று கார்கள், ஆறு மோட்டார் சைக்கிள்கள், ஒரு எம்பிவி, பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மஸ்டா கார் காப்பீடு இல்லாமல், வாகன உரிமமும் காலாவதியானது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், புரோட்டான் சாவி, மிட்சுபிஷி ட்ரைடன் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
எகிப்திய குடியுரிமையாளர் ஒருவர் எம்பிவி கார் ஓட்டி, வாகன உரிமையை தவறாக பயன்படுத்தியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டார்.
மலாக்கா சாலை போக்குவரத்து துறையின் இயக்குநர் சித்தி ஜரினா முஹம்மது யூசோப், இவ்வாறு சட்டபூர்வ உரிமை இல்லாமல் வாகனம் ஓட்டுவது நெறிமுறைகளை மீறுவதாகவும், இது சாலையோர மக்களின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தலாகும் என்பதற்காக வாகனங்களை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளார். 65 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 6:19 pm
பொன்தியானில் பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று
February 9, 2026, 6:16 pm
சீன புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து வசதி: பிளஸ் 32 ஸ்மார்ட் லேன்களை இயக்கவுள்ளது
February 9, 2026, 5:42 pm
மூன்று வீடுகளில் புகுந்து தாக்கிய வேலை இல்லாத நபர் கைது
February 9, 2026, 5:39 pm
அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது
February 9, 2026, 5:12 pm
ஆவணமற்ற இந்து ஆலயங்கள் பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும்: டத்தோ லோகபாலா
February 9, 2026, 5:08 pm
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: யுனேஸ்வரன்
February 9, 2026, 4:17 pm
போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்
February 9, 2026, 3:34 pm
