நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது

மலாக்கா:

கடந்த வாரம் உணவு நேரத்தில் வரிசையைக் கடந்து உணவு வாங்கச் சென்றதாக நம்பப்படும் மாணவர் ஒருவரை அடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்டு, ஒரு தொழிற்கல்லூரியின் எட்டு மாணவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதாக மாநிலக் கல்வி, உயர்கல்வி, மத விவகாரங்களுக்கான எக்ஸ்கோ, டத்தோ ரஹ்மத் மரிமன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் வழக்கு முடியம் வரை இரண்டு வாரங்கள் கல்லூரி இடைநிறுத்தம் (suspension) செய்யப்படுவார்கள். இதற்கான அனைத்து நடவடிக்கையும் மத்திய கல்வித்துறையின் (KPM) அதிகாரப்பூர்வமான கட்டுப்பாட்டில் நடைபெறுகிறது எனும் மேலும் பேசிய அவர் கூறினார்.

"இந்தச் சம்பவம், உணவு நேரத்தில் வரிசையைக் கடந்து சென்ற மாணவர் மேல் உள்ள பொறாமை உணர்ச்சியால் ஏற்பட்டது," என அவர் கூறினார்.

மாணவர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்தவொரு மாணவரும் பள்ளியிலிருந்து நீக்கப்படவில்லை; இருப்பினும் சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தை மாற்ற கோரியுள்ளனர். இது மத்திய கல்வித்துறையின் தொழில்நுட்ப, தொழில்முறை கல்வி பிரிவின் அனுமதிக்கு உட்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அலோர் காஜா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

- சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset