செய்திகள் மலேசியா
சீன புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்து வசதி: பிளஸ் 32 ஸ்மார்ட் லேன்களை இயக்கவுள்ளது
சுங்கை புலோ:
பிளஸ் மலேசியா பெர்ஹாட் (PLUS) சீன புத்தாண்டை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த வடக்கு–தெற்கு நெடுஞ்சாலைகளில் 32 ஸ்மார்ட் லேன் இடங்களை இயக்கியுள்ளது.
"இதன் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு மண்டலத்திலிருந்து தெற்கு மண்டலத்திற்கு முக்கிய பாதைகளில் உள்ள ஸ்மார்ட் லேன்களை உள்ளடக்கியது.
பெருநாள் காலங்களில் போக்குவரத்து சுமையைச் சமாளிக்க இது உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது" என்று PLUS இயக்குநர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜஃபார் கூறினார்.
"இந்தச் சீன புத்தாண்டு காலத்தில், நாங்கள் 32 இடங்களில் ஸ்மார்ட் லேன்களை அதிகரித்துள்ளோம். இருப்பினும் பயனர்கள் பொறுமையாக வாகனங்களை ஓட்ட வேண்டும். ஸ்மார்ட் லேன் என்பது ஓட்டுநர்கள் வேகமாகச் செல்லுவதற்காக அல்ல, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதாகும் என்பதை சாலை பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
மொத்த 32 ஸ்மார்ட் லேன் இடங்களில் 19 இடங்கள் மத்திய மண்டலத்தில், 8 இடங்கள் தெற்கு மண்டலத்தில், 5 இடங்கள் வடக்கு மண்டலத்தில் உள்ளன. இவை பொதுவாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பாதைகளில் அமைந்துள்ளன.
"ஸ்மார்ட் லேன் இயக்கம் போக்குவரத்து நிலையைப் பொறுத்து மட்டுமே செயல்படும். நெரிசல் அதிகரிக்கும் போது மட்டுமே இது இறுதி தீர்வாக பயன்படுத்தப்படும்" என்று பிளஸ் தலைமை இயக்க அதிகாரி, டத்தோ ஐ.ஆர். ஜகாரியா அஹ்மத் சாபிதி தெரிவித்துள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 9, 2026, 6:19 pm
பொன்தியானில் பள்ளி மாணவருக்கு காசநோய் தொற்று
February 9, 2026, 5:42 pm
மூன்று வீடுகளில் புகுந்து தாக்கிய வேலை இல்லாத நபர் கைது
February 9, 2026, 5:39 pm
அடிதடியில் ஈடுபட்ட 8 தொழிற்கல்லூரி மாணவர்கள் கைது
February 9, 2026, 5:12 pm
ஆவணமற்ற இந்து ஆலயங்கள் பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும்: டத்தோ லோகபாலா
February 9, 2026, 5:08 pm
வழிப்பாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசு சமநிலையாகக் கையாளும்: யுனேஸ்வரன்
February 9, 2026, 4:17 pm
போதைப்பொருள், குற்ற வழக்குகள் தொடர்புடைய 10 பேர் காப்பிக்கடை சண்டையில் பிடிபட்டனர்
February 9, 2026, 3:34 pm
ஸ்பைடர்மேன் உடை அணிந்து குழந்தையை பிச்சை எடுக்க பயன்படுத்திய ஆடவர் கைது
February 9, 2026, 3:31 pm
