
செய்திகள் மலேசியா
4 மணி நேர கனமழையைத் தொடர்ந்து தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கமுனிங்கில் வெள்ளம்: மக்கள் பாதிப்பு
ஷாஆலம்:
நான்கு மணி நேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து தாமான் ஶ்ரீ மூடா, புக்கிட் கமுனிங் உட்பட பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
இன்று அதிகாலை முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது.
இதனால் ஷா ஆலம் புக்கிட் கமுனிங், செக்ஷன் 32 தாமான் ஶ்ரீ மூடா சுற்றுவட்டாரத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரை மணி நேரத்திற்குள் நீர்மட்டம் திடீரென முழங்கால் உயரத்திற்கு உயர்ந்தது.
வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியதைக் காட்டும் வீடியோக்களை குடியிருப்பாளர்கள் பதிவேற்றியபோது இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானது.
எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் தண்ணீர் மிக விரைவாக நிரம்பி வழிந்ததால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் தண்ணீர் நிரம்பி தொடங்கியது என பாதிக்கப்பட்ட மக்கள் கூறினர்.
வெள்ள் நீர் தற்போது வடிய தொடங்கியுள்ளது. இருந்தாலும் அடிக்கடி ஏற்படும் வெள்ளம் இப்பகுதி மக்களுக்கு தொடர் வேதனையை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:13 am
மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது: பிரதமர்
July 2, 2025, 10:02 am
ஐந்து வாகனங்கள் எரியூட்டப்பட்ட சம்பவம்: நான்கு சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
July 2, 2025, 9:57 am
சிரம்பானில் உள்ள வீடொன்றில் மூன்று குடும்ப உறுப்பினர்கள் சடலமாக கண்டுப்பிடிப்பு
July 1, 2025, 11:33 pm
மாணவி மணிஷாப்ரீத் கொலை வழக்கு; 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்பட்டது: ஹுசைன் ஒமார் கான்
July 1, 2025, 11:28 pm