
செய்திகள் மலேசியா
அமெரிக்காவுடனான அரசத் தந்திர உறவில் தேசிய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஜாஹித் ஹமிடி
கோலாலம்பூர்:
மலேசியா-அமெரிக்கா இடையிலான அரசத் தந்திர உறவு விவேகமான தூதரக அணுகுமுறையுடன் தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹமத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்.
உலகின் பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவுடன் அரசத் தந்திர உறவு வைத்துக் கொள்ளும் போது நம்முடைய நலன்களும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்றார் அவர்.
இதற்கு ஒரு திட்டமிட்ட அணுகுமுறை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான மலேசிய புதிய தூதராக நியமிக்கப்பட்ட Tan Sri Muhammad Shahrul Ikram Yaakob உடனான சந்திப்பின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டதை ஜாஹித் உறுதிப்படுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது, மலேசியா - அமெரிக்கா இடையிலான முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் குறிப்பாக அரசத் தந்திர உறவுகளை வலுப்படுத்துவதின் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Tan Sri Muhammad Shahrul Ikram Yaakob தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பைத் திறம்பட செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஜாஹித் குறிப்பிட்டார்.
முன்னாள் தலைமைச் செயலராக பணியாற்றிய Tan Sri Muhammad Shahrul Ikram Yaakob கடந்த ஜூன் 3-ஆம் தேதி அமெரிக்காவுக்கான மலேசிய தூதராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 11:43 pm
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
July 12, 2025, 11:41 pm
நீதித்துறையை சுதந்திர பேரணி: புத்ராஜெயாவில் போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கும்
July 12, 2025, 11:39 pm
நீதித்துறை பிரச்சினைகள் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கப்பட்டன: பிரதமர்
July 12, 2025, 1:47 pm