
செய்திகள் மலேசியா
எஸ்பிஎம் தேர்வில் 2ஏ: அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் 2 இளங்கலை பட்டம் பெற்றார் Zul Hakim Zulhaimi
கோலாலம்பூர்:
எஸ்பிஎம் தேர்வில் 2 ஏ-க்கள் பெற்ற Zul Hakim Zulhaimi என்பவர் அமெரிககாவின் Purdue பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் 2 இளங்கலை பட்டங்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
எஸ்பிஎம் தேர்வில் 2 ஏ-க்கள் பெற்றத்தால் அவர் அரசாங்கப் பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வி பயிலும் வாய்ப்பை இழந்துள்ளார்.
மனம் தளராத Zul Hakim Zulhaimi German-Malaysian கல்வி நிறுவனத்தில் இணைந்து Mechatronic Engineering Technology துறையில் டிப்ளோமா படிப்பை தொடர்ந்தார்.
கலைத் துறை மாணவனான Zul Hakim Zulhaimi முதலில் சற்று சிரமத்தை எதிர்நோக்கினாலும் கடந்த 2021-ஆம் ஆண்டு சிற்ந்த தேர்ச்சி பெற்று டிப்ளோமா கல்வியை நிறைவு செய்துள்ளார்.
அதன் பின் பொறியியல் கல்விக்குப் புகழ்பெற்ற அமெரிக்காவின் Purdue பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கல்வியை மேற்கொண்டார்.
அங்கு பல புத்தாக்க கருவிகளையும் பொருட்களையும் வடிவமைத்து தொழில் துறை நிபுணர்களின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
Zul Hakim Zulhaimi ஒரு தவணையை முன்கூட்டியே முடித்து, பொறியியல் துறையில் இரு இளங்கலைப் பட்டத்தைப் பெற்றதோடு தனது சிறப்பான கல்வி சாதனைகளுக்காக Golden Honor Cord விருதையும் பெற்று சாதனை படைத்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 16, 2025, 10:19 pm
கூடுதல் உத்தரவு தொடர்பில் முன்னாள் ஏஜிக்கு எதிராக நஜிப் போலிஸ் புகார் செய்தார்
June 16, 2025, 10:10 pm
அன்வாருக்கு எதிரான யூசோஃப் ராவுத்தரின் வழக்கு மேலாண்மை செப்டம்பர் 30இல் நடைபெறும்
June 16, 2025, 10:06 pm
நெடுஞ்சாலை நிதி மோசடி: டான்ஸ்ரீயின் வாக்குமூலம் வியாழக்கிழமை பதிவு செய்யப்படும்: அசாம் பாக்கி
June 16, 2025, 10:06 pm
ஈரான் - இஸ்ரேல் மோதலால் வர்த்தக வழிகள் தடுக்கப்படலாம் என்ற கவலைகள் உள்ளன: பிரதமர்
June 16, 2025, 4:50 pm
RON95 எரிபொருள் மானியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்: பிரதமர் அன்வார்
June 16, 2025, 4:35 pm
எனது தந்தையின் உடல்நலனுக்கு பிரார்த்தனை செய்யுங்கள்: டான்ஸ்ரீ ஹாடி அவாங் மகன் வேண்டுகோள்
June 16, 2025, 4:32 pm