நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் 726 மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

சுங்கைப்பட்டாணி:

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் 726  மாணவர்களுக்கு 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது.

மஇகா தேசிய தலைவரும் எம்ஐஇடி தலைவருமான டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

இந்த ஆண்டுக்கான எம்ஐஇடி கல்வி உபகாரச் சம்பளம் காசோலை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இன்று கிட்டத்தட்ட  726 ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மொத்தம் 18 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச் சம்பளம்  வழங்கப்பட்டது.

கடந்த 1984 முதல், 14,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்ஐஇடி மூலம் கல்வி உபகாரச் சம்பளம் பெற்றுள்ளனர்.

அவர்களுக்கு 216 மில்லியன் ரிங்கிட் கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த துன் எஸ். சாமி வேலுவால் நிறுவப்பட்ட இந்த நீடித்த மரபு, நமது சமூகத்தின் முன்னேற்றத்தின் அசைக்க முடியாத தூணாக உள்ளது.

அவரது தொலைநோக்கு ஒரு நிலையான கல்வி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கியது

இது தலைமுறை தலைமுறையாக இந்த சேவையை எம்ஐஇடி செய்து வருகிறது.

மேலும் இந்த விஷயத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முக்கியமான மானியம் தொடர்ந்து நிலைத்திருக்க உதவிய உறுதியான ஆதரவிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உயர் கல்வி பயில நிதிச் சுமைகளால் பாதிக்கப்படக் கூடாது.

இதை உறுதி செய்வதற்கு பிரதமரின் அர்ப்பணிப்பு மிகவும் அர்த்தமுள்ளதாக உள்ளது.

மேலும் அனைத்து சமூகங்கள், பொருளாதார பிரச்சினைகளை கடந்து உயர் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.

மலேசியாவில் எதிர்காலத்தின் அடிப்படையில் புதுமை, திறன்கள், ஸ்டேம், திவேட் ஆகியவற்றில் கவனம்  செலுத்தப்படுகிறது.

இந்த விவகாரங்களிலும் எம்ஐஇடி கவனம் செலுத்தும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset