நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பலாப்ஸ் பயிற்சியாளர் மரண விசாரணையில் எந்த தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை: ஜம்ரி

செமினி:

பலாப்ஸ் பயிற்சியாளர் மரண விசாரணையில்  எந்த தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை என்று உயர் கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் கூறினார்.

மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஸ்கூடாயைச் சேர்ந்த ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை பயிற்சியாளரான மறைந்த சம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் அண்மையில் காலமானார்.

அவரின்  மரணம் தொடர்பான விசாரணையில் எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்கக் கூடாது என்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது.

தற்காப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, மலேசியா சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சுகளை உள்ளடக்கிய விசாரணைக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அமைச்சு யூடிஎம்க்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏதேனும் மோசமான கூறுகள் இருந்தால் அமைச்சு யாரையும் பாதுகாக்காது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset