நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருக்குறளின் புகழ், மகத்துவம் அனைத்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே ஜெயப்பக்தி நிறுவனத்தின் இலக்காகும்: டத்தோ செல்வராஜூ

கோலாலம்பூர்:

திருக்குறளின் புகழ், மகத்துவம் அனைத்து மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே ஜெயப்பக்தி நிறுவனத்தின் முதன்மை இலக்காகும்.

குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு. செல்வராஜ் இதனை தெரிவித்தார்.

பத்து ஆண்டுகள் கடும் முயற்சிக்கு பிறகு மும்மொழியில் திருக்குறள் புத்தகத்தை குயில் ஜெயபக்தி நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது.

உலகப் புகழ் பெற்ற நூலாக திருக்குறள் விளங்குகிறது.

ஏற்கெனவே தமிழ் மொழியில் திருக்குறள் புத்தகம் உள்ளது.

இப்போது மலாய், ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மும்மொழியில் திருக்குறள் புத்தகம் தயாராகி உள்ளது.

அனைத்து இனத்தவரும் திருக்குறளை படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் இந்த புத்தகம் தயாராகி உள்ளது.

மிக விரைவில் மும்மொழி திருக்குறள் புத்தகம் மிகப்பெரிய அளவில் வெளியீடு காணும் என்று அவர் சொன்னார்.

திருக்குறள் சுருக்கமாக குறள் ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும்.

சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.

இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

இந்நூல் அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்மதச்சார்பற்றறாகக் கருதப்படுகிறது.

பொதுத் தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.

இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே செந்தூல் தண்டாயுதபாணி ஆலயத்தில் கடைசி ஆடி வெள்ளிக்கிழமை பூஜை சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

செந்தூல் வட்டார மக்கள் திரளாக வந்து இப்பூஜையில் கலந்து கொள்ளுமாறு டத்தோ செல்வராஜூ கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset