
செய்திகள் மலேசியா
என் மகன் சம்சுல் மரணம் வலிப்பால் ஏற்பட்டதல்ல; உடலில் கடுமையான காயம், இரத்தப்போக்கு இருந்தது: தாயார்
செமினி:
என் மகன் சம்சுல் மரணம் வலிப்பால் ஏற்பட்டதல்ல. அவரின் உடலில் கடுமையான காயம், இரத்தப்போக்கு இருந்தது.
சம்சுலின் தாயார் 45 வயதான உம்மு ஹைமான் பீ தௌலட்குன் இதனை தெரிவித்தார்.
ஸ்கூடாய் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படையில் (PALAPES) பயிற்சி பெற்ற 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் காலமானார்.
என் மகனின் மரணம் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
மேலும் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய தனது மகனின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும்.
எந்தவொரு தரப்பினரையும் பாதுகாக்காமல் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளும் வகையில் உயர்கல்வி அமைச்சு மூலம் ஏஜிசி அலுவலகத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனது மகனின் மரணம் வலிப்புத்தாக்கத்தால் ஏற்பட்டதல்ல என்று நான் நம்புகிறேன்.
காரணம் உடலில் கடுமையான காயங்கள் இரத்தப்போக்கு இருந்ததாக அவர் கூறினார்.
ஆகவே உடனடியாக இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
யாரையும் பாதுகாக்காமல் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த வழக்கை விசாரிக்க நிறுவப்பட்ட சிறப்புக் குழுவில் குடும்பத்தின் வழக்கறிஞரை உறுப்பினராக நியமிக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன் என அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 10:47 pm
ஷாரா மரண வழக்கு விசாரணை அச்சமோ பாரபட்சமோ இல்லாமல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மூசா அமான்
August 11, 2025, 10:45 pm
ஷாரா கைரினா வழக்கின் விசாரணையை புக்கிட் அமான் கைப்பற்றியது: சபாவிற்கு சிறப்புப் குழுவை அனுப்புகிறது
August 11, 2025, 6:12 pm
பேராக்கில் தேசிய முன்னணி, மஇகா இடையே எந்த மோதலும் இல்லை: சாரணி
August 11, 2025, 5:47 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் மரண விசாரணையில் எந்த தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை: ஜம்ரி
August 11, 2025, 11:31 am
ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு மாமன்னர் பாதுகாப்பாக நாடு திரும்பினார்
August 11, 2025, 11:30 am