நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3ஆம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகை நாளை செலுத்தப்படும் 8.6 மில்லியன் மக்கள் 650 ரிங்கிட் வரை பெறுவார்கள்: நிதியமைச்சு

புத்ராஜெயா:

மூன்றாம் கட்ட எஸ்டிஆர் உதவித் தொகை நாளை செலுத்தப்படும். 8.6 மில்லியன் மக்கள் 650 ரிங்கிட் வரை பெறுவார்கள்.

நிதியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

எஸ்டிஆர் கொடுப்பனவுகள் நாளை முதல் பெறுநர்களுக்கு படிப்படியாக வரவு வைக்கத் தொடங்கும்.

இதில் நாடு முழுவதும் மொத்தம் 8.6 மில்லியன் பெறுநர்கள் அடங்குவர்.

2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில், குடும்பங்கள், மூத்த குடிமக்கள்,  தகுதியைப் பொறுத்து மொத்த கொடுப்பனவு 650 வரை இருக்கும்.

கடந்த ஜனவரியில் முதல் கட்ட உதவித் தொகையை 8.3 மில்லியன் பேர் பெற்றனர்.

ஆனால் இம்முற  8.6 மில்லியன் பேர் உதவித் தொகையை பெறுகின்றனர்.

இதன் அடிப்படையில்  மொத்த எண்ணிக்கை 300,000 பேர் அதிகமாகும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset