நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா கைரினா வழக்கின் விசாரணையை புக்கிட் அமான் கைப்பற்றியது: சபாவிற்கு சிறப்புப் குழுவை அனுப்புகிறது

கோலாலம்பூர்:

ஷாரா கைரினா வழக்கின் விசாரணையை புக்கிட் அமான் கைப்பற்றியுள்ளது.

தேசிய போலிஸ்படை தலைவர் அலுவலகம் ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்தது.

மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையை மேற்கொள்ள புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை சபா போலிஸ் துறைக்கு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அனுப்பியுள்ளது.

குறிப்பாக ஒன்பது அதிகாரிகள், சிஐடி உறுப்பினர்கள் சபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறியது.

விசாரணைகள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கான போலிஸ்படையின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த சிறப்புப் பணிக் குழு உள்ளது.

மேலும் உயிர் இழப்பு தொடர்பான ஒவ்வொரு வழக்கையும் போலிஸ்படை தீவிரமாகப் பார்க்கிறது என அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset