
செய்திகள் மலேசியா
சுக்மாவில் சிலம்பம்; இந்தியர்கள் விவகாரத்தில் மடானி அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது வெறும் கட்டுக்கதை: ராயர்
கோலாலம்பூர்:
இந்தியர்கள் விவகாரத்தில் மடானி அரசு அக்கறை செலுத்தவில்லை என்பது வெறும் கட்டுக்கதை தான்.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் இதனை கூறினார்.
2026 சுக்மா விளையாட்டுப் போட்டியில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினர் மடானி அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
குறிப்பாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணையமைச்சர்கள் வாய் திறந்து பேசவில்லை. ஊமையாகி விட்டனர் என கடுமையாக சாடினர்.
ஆனால் எல்லா விவகாரங்களிலும் நாங்கள் கத்த முடியாது. அமைதியாக தான் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.
இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ உட்பட அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இதன் வாயிலாக தான் சிலம்பப் போட்டி சுக்மாவில் இணைக்கப்பட்டது.
இவ்வேளையில் மடானி அரசுக்கும் சிலாங்கூர் மாநில அரசுக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே வேளையில் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் நலனின் மடானி அரசு அக்கறை செலுத்து வருகிறது.
சிலம்பப் போட்டி சுக்மாவில் இணைக்கப்பட்டதன் மூலம் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டும் கட்டுகதையாகி விட்டது.
ஆக பொதுமக்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் என ராயர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 10:48 pm
என் மகன் சம்சுல் மரணம் வலிப்பால் ஏற்பட்டதல்ல; உடலில் கடுமையான காயம், இரத்தப்போக்கு இருந்தது: தாயார்
August 11, 2025, 10:47 pm
ஷாரா மரண வழக்கு விசாரணை அச்சமோ பாரபட்சமோ இல்லாமல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மூசா அமான்
August 11, 2025, 10:45 pm
ஷாரா கைரினா வழக்கின் விசாரணையை புக்கிட் அமான் கைப்பற்றியது: சபாவிற்கு சிறப்புப் குழுவை அனுப்புகிறது
August 11, 2025, 6:12 pm
பேராக்கில் தேசிய முன்னணி, மஇகா இடையே எந்த மோதலும் இல்லை: சாரணி
August 11, 2025, 5:47 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் மரண விசாரணையில் எந்த தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை: ஜம்ரி
August 11, 2025, 11:31 am
ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு மாமன்னர் பாதுகாப்பாக நாடு திரும்பினார்
August 11, 2025, 11:30 am