நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் தேசிய முன்னணி, மஇகா இடையே எந்த மோதலும் இல்லை: சாரணி

ஈப்போ:

பேரா மாநிலத்தில் தேசிய முன்னணி, மஇகா இடையே எந்த மோதலும் இல்லை.

பேரா மந்திரி புசாரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ சாரணி முஹம்மத் கூறினார்.

ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பேரா தேசிய முன்னணி,  மாநில மஇகா இடையே எந்தப் பிரச்சினையோ அல்லது பதட்டமோ இல்லை.

மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி, சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிற தலைவர்களுடன் நல்ல உறவைப் பேணி வருகின்றனர்.

மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதி இல்லாவிட்டாலும்,

பேரா தேசிய முன்னணி மாநில மஇகாவை ஒருபோதும் ஒதுக்கியதில்லை என்று அவர் கூறினார்.

உள்ளூர் மாவட்ட மன்ற உறுப்பினர்களாக இருப்பதைத் தவிர, மாநில அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் மஇகா பிரதிநிதிகளுக்கு முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது

தெலுக் இந்தானில் நடந்த பேரா செஜாதேரா 2030 நிகழ்வுக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset