நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2026 ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்: பிரதமர்

புக்கிட் ஜாலில்:

அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் ஓராண்டுக்கு கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த கல்வி லெவி வரி விலக்களிக்கப்படும்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த விலக்கை அளிக்கிறது.

மலேசிய வரலாற்றில் லெவி விலக்கு அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

செயல்பாட்டு அழுத்தங்களைக் குறைக்க ஆதரவைக் கோரிய கல்வி, பயிற்சி நிறுவனங்களின் விரிவான கோரிக்கையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தங்களால் முடிந்ததைச் செய்ய முடியும் என்பதை கண்காணிக்க வேண்டும்.

இதனை கல்வி அமைச்சின் பொதுச் செயலாளரும் மனிதவள அமைச்சும் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.

புக்கிட் ஜாலிலில் நடைபெறும் தேசிய பயிற்சி வாரத்தை தொடக்கி வைத்து பேசிய பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

மலேசியர்களின் கல்வி, தொழில் திறன் மேம்பாட்டில் அரசாங்கம் தொடர்ந்து  கவனம் செலுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் தான் இந்த லெவி விலக்கு திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset