நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

புளோரியனை 116 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்க லிவா்பூல் ஒப்புதல்

லண்டன்:

ஜொ்மனியின் இளம் கால்பந்து வீரா் ஃபுளோரியன் விா்ட்ஸை பாயா் லெவா்குசென் அணியிடம் இருந்து 116 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்க லிவா்பூல் அணி ஒப்புக்கொண்டுள்ளது.

அந்தத் தொகை முழுமையாக செலுத்தப்படும் நிலையில், இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரராக ஃபுளோரியன் சாதனை படைப்பாா். 

இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் இதுவரை, 2013இல் அர்ஜெண்டினா வீரா் என்ஸோ ஃபொ்னாண்டஸை, போர்த்துகல் கிளப்பான பென்பிகாவிடம் இருந்து செல்சி அணி 107 மில்லியன் பவுண்ட் தொகைக்கு வாங்கியதே அதிகபட்சமாக உள்ளது.

அப்போது இங்கிலாந்து பிரிமியா் லீக் கால்பந்து போட்டியில் 2ஆவது முறையாக லிவா்பூல் அணி அண்மையில் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. 

இதையடுத்து அந்தக் கிண்ணத்தை தக்கவைக்கும் முயற்சிகளை தற்போதிருந்தே தொடங்கியிருக்கும் லிவா்பூல்,  அதற்கான பலமான அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. 

அதன் முதல் நடவடிக்கையாக ஃபுளோரியனை கையகப்படுத்துகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset