நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

1,000 கோல்களை நோக்கி ரொனால்டோ: 93.7% நிறைவு செய்துள்ளார்

லிஸ்பன்:

போர்த்துகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 1,000 கோல்களை நோக்கி நகர்ந்து வருகிறார்.

40 வயதான ரொனால்டோ, 1000 கோல்கள் அடிப்பது எனது கனவு என 900 கோல்களை நிறைவு செய்தபோது கூறியிருந்தார். 

சொன்னதுபோலவே அதை நிறைவேற்றி விடுவார் போலிருக்கிறது.

அண்மையில் நடந்த ஐரோப்பிய தேசிய லீக்கில் ஜெர்மனிக்கு எதிராக 68ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் நாட்டிற்காக தனது 137ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக தனது 937 கோலை அடித்துள்ளார். அதாவது, 1000 கோல்கள் என்பதில் 93.7 சதவிகித கோல்களை நிறைவு செய்துள்ளார்.

ரொனால்டோவின் ஜெர்ஸி எண். 7ஆக இருக்கிறது. 93.7% என அவரது விருப்பமான எண்ணுடன் முடிந்ததை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

40 வயதிலும் இந்தமாதிரி ஃபிட்னஸ் உடன் விளையாடுவது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset